மேலும் செய்திகள்
ைஹமாஸ் விளக்கு பழுது பக்தர்கள் அவதி
23-Dec-2024
தொண்டி: தொண்டி பழைய பஸ்ஸ்டாண்டில் ைஹமாஸ் விளக்கு எரியாததால் வாகன ஓட்டிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.தொண்டி பழைய பஸ்ஸ்டாண்ட் அருகே மதுரை- தொண்டி, ராமநாதபுரம்- பட்டுகோட்டை ரோடுகள் சந்திப்பு இடத்தில் 24 மணி நேரமும் போக்குவரத்து அதிகமாக இருக்கும். இங்கு அமைக்கப்பட்ட ைஹமாஸ் விளக்கு மூன்று மாதங்களாக எரியவில்லை. அப்பகுதி மக்கள் கூறியதாவது:மூன்று ரோடுகள் சந்திக்கும் இடத்தில் 24 மணி நேரக் கடைகள் உள்ளன. குடியிருப்புகள் அதிகமாக இருப்பதால் மக்கள் நடமாட்டமும் அதிகமாக இருக்கும். இங்குள்ள ைஹமாஸ் விளக்கு மூன்று மாதங்களாக எரியவில்லை. இதனால் இருள் சூழ்ந்துள்ளது.பெண்கள் இரவு நேரத்தில் வெளியில் நடமாட முடியாமல் அச்சத்தில் உள்ளனர். வாகன ஓட்டிகளும் சிரமம் அடைந்துள்ளனர். பாவோடி மைதானத்தில் உள்ள விளக்கு உடைந்துள்ளது. ஆரம்ப சுகாதார நிலையம் அருகே உள்ள ஐந்து விளக்கில் ஒரு விளக்கு மட்டும் எரிகிறது.கைக்குளான் ஊருணி அருகே விளக்கில் இரண்டு மட்டும் எரிகிறது. பேரூராட்சி நிர்வாகத்தில் பலமுறை வலியுறுத்தப்பட்டது. ஆனால் அலுவலர்கள் கண்டு கொள்ளாமல் மெத்தனப் போக்கில் உள்ளனர். கலெக்டரிடம் மனு கொடுக்க உள்ளோம் என்றனர்.
23-Dec-2024