உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / பகுதிநேர ரேஷன் கடை திறக்கப்படாத அவலம்

பகுதிநேர ரேஷன் கடை திறக்கப்படாத அவலம்

முதுகுளத்துார் : முதுகுளத்துார் அருகே காத்தாகுளம் கிராமத்தில் பகுதி நேர ரேஷன் கடை திறப்பதற்கு பொருட்கள் இறக்கி வைத்தும் இதுவரை திறக்கப்படாமல் இருப்பதால் பொருட்கள் வீணாகும் அவலநிலை உள்ளது.முதுகுளத்துார் அருகே காத்தாகுளம் கிராமத்தில் 300க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றனர். ரேஷன் கடை வசதி இல்லாததால் ரேஷன் கார்டுதாரர்கள் 5 கி.மீ., முதுகுளத்துார் சென்று அரிசி உட்பட அத்தியாவசியப் பொருட்கள் வாங்கி வருகின்றனர்.ரேஷன் பொருட்கள் வாங்கும் நாட்களில் அத்தியாவசிய வேலைக்கும், விவசாயப் பணிக்கும் செல்ல முடியவில்லை. இதுகுறித்து அக்.10ல் தினமலர் நாளிதழில் செய்தி வெளியானது. இதன் எதிரொலியாக செய்தி வெளியான அன்றே மாவட்ட வழங்கல் அலுவலர் காத்தாகுளம் கிராமத்தில் நேரில் ஆய்வு செய்து பகுதி நேர ரேஷன் கடை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தார்.இதையடுத்து கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு கிராமத்தில் உள்ள கட்டடத்தில் அரிசி உட்பட அத்தியாவசியப் பொருட்கள் இறக்கி வைக்கப்பட்டது. ஆனால் தற்போது வரை பகுதி நேர ரேஷன் கடை திறக்கப்படாமல் உள்ளது. இதனால் இறக்கி வைக்கப்பட்ட பொருட்களை அணில் உட்பட பறவைகள் இரையாக்கி கொண்டு வருகிறது.இதனால் அத்தியாவசியப் பொருட்கள் வீணாகும் அவலநிலை உள்ளது. எனவே பொருட்கள் இறக்கி வைக்கப்பட்டுள்ள நிலையில் பகுதிநேர ரேஷன் கடையை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை