உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / பத்திரம் பதிவு செய்தவுடன் பட்டா மாறுவதில் சிக்கல் அதிகாரிகளின் அலட்சியம்

பத்திரம் பதிவு செய்தவுடன் பட்டா மாறுவதில் சிக்கல் அதிகாரிகளின் அலட்சியம்

ஆர்.எஸ்.மங்கலம் : பத்திரப்பதிவு செய்தவுடன் குறிப்பிட்ட நாட்களுக்குள் பட்டா மாறுதல் செய்யும் நடைமுறை செயல்பாட்டில் உள்ள நிலையிலும் பெரும்பாலானவர்களுக்கு பல நாட்கள் ஆனாலும் பட்டா மாறுதல் செய்யப்படுவதில்லை என்ற புகார் எழுந்துள்ளது.தமிழகத்தில் பத்திரப்பதிவு மேற்கொண்டவுடன் தானாக பட்டா மாறுதல் என்ற முறையில் உடனடியாக பதிவு செய்யப்பட்ட பத்திரத்தில் உள்ள உரிமையாளரின் பெயருக்கு பட்டா மாறுதல் செய்யப்படும் திட்டம் தமிழகத்தில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதற்காக பத்திரப் பதிவு மேற்கொள்ளும் சார் பதிவாளர் அலுவலகத்தில் பட்டா மாறுதல் செய்வதற்கான கட்டணமும் பத்திரப்பதிவு மேற்கொள்ளும் போதே பெறப்பட்டு விடுகின்றன. அதைத் தொடர்ந்து உட்பிரிவு இல்லாத பட்டா, உட்பிரிவுடன் கூடிய பட்டா என இரண்டு வகையாக பிரிக்கப்பட்டு குறிப்பிட்ட நாட்களுக்குள் பட்டா மாறுதல் வழங்க வேண்டும்.இந்நிலையில், ஆர்.எஸ்.மங்கலம் சார்பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்யப்படும் பத்திரங்களில் 80 சதவீதம் பட்டா மாறுதல் செய்யப்படுவதில்லை என்ற புகார் எழுந்துள்ளது. இதனால் பத்திரப்பதிவு செய்தவர்கள் பட்டா மாறுதலுக்கு மீண்டும் பணம் செலுத்தி ஆன்லைனில் விண்ணப்பம் செய்ய வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர்.வருவாய்த் துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், பத்திரப்பதிவு செய்தவுடன் நிலத்தின் தன்மையைப் பொறுத்து குறிப்பிட்ட நாட்கள் இடைவெளியில் பட்டா மாறுதல் செய்யப்படுகிறது. ஆனால் பெரும்பாலான பத்திர எழுத்தர்கள் பத்திரப்பதிவு மேற்கொள்ளும் போது பட்டா மாறுதலுக்கான விண்ணப்ப நடைமுறையை முறையாக மேற்கொள்வதில்லை.இதனால் தான் இப்பிரச்சினை ஏற்படுகிறது. பதிவுத்துறை அதிகாரிகள் இதில் கவனம் செலுத்தி நடைமுறை சிக்கல்களை களைய வேண்டும் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

vinoth kirti
நவ 22, 2024 18:53

ரூ20000; கிராம நிர்வாக அலுவலர், இது மட்டும் இல்லாமல் ,டெப்டி தாசில்தார்க்கு வேணுமாம்


vinoth kirti
நவ 22, 2024 18:50

இதில் நாங்களும் ஓருவர் பட்டாவில் கணவர். பெயர் மாற்றம் செய்ய ரூ20000 வேண்டுமா


g rajendran
நவ 22, 2024 06:23

Yes,marungaburi taluk, Trichy also same


Srimathibuilders
நவ 21, 2024 10:34

ஆம் தூத்துக்குடி ஓட்டப்பிடாரம் தாலுகா ஆபீஸ் . சவரிமங்கலம் விஏஓ கார்த்திகேயன் பணம் கொடுத்தால் பட்டா தரப்படும் என்று ஆணை .


முக்கிய வீடியோ