உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / பாம்பனில் கடல் உள்வாங்கியது படகுகள் தரை தட்டி நின்றன

பாம்பனில் கடல் உள்வாங்கியது படகுகள் தரை தட்டி நின்றன

ராமேஸ்வரம்:ராமேஸ்வரம் அருகே பாம்பனில் நேற்று திடீரென கடல் உள்வாங்கியதால் நாட்டுப்படகுகள் தரைதட்டி நின்றன.நேற்று காலை பாம்பன் தென் பகுதியில் மீனவர்கள் கிராமமான சின்னபாலம், நடுத்தெரு கடற்கரையில் திடீரென 200 மீ., கடல் உள்வாங்கியது. இதனால் பாசி படர்ந்த மணல் பரப்பு வெளியில் தெரிந்தது. கடல் சிப்பிகள், சங்குகள், சிறிய ரக நண்டுகள் கடல் நீரின்றி தத்தளித்துக் கொண்டிருந்தன. 100க்கும் மேற்பட்ட நாட்டுப்படகுகள் தரைதட்டி சாய்ந்தன.நேற்று காலை மீன்பிடிக்க செல்ல தயாரான மீனவர்கள் படகுகள் சாய்ந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்து கடலுக்கு செல்ல முடியாமல் வீடுகளில் முடங்கினர். நீரோட்டம் மாறுபாட்டினால் கடல்நீர் உள்வாங்கியதாகவும், ஜன., முதல் ஏப்., வரை கடல் உள்வாங்குவது சகஜம் என மீனவர்கள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை