அரசு பள்ளிகளுக்கு புத்தகம் அனுப்பும் பணி
திருவாடானை:திருவாடானை வட்டாரத்தில் 77 அரசு தொடக்கபள்ளிகள், 18 நிடுநிலைப்பள்ளிகள் உள்ளன. புதிய கல்வியாண்டிற்கான புத்தகங்கள் மே முதல் வாரத்தில் வட்டார கல்வி அலுவலகத்திற்கு வினியோகிக்கப்பட்டன.ஜூன் 2 ல் பள்ளிகள் திறக்கப்படவுள்ளன. முதல் நாளில் மாணவர்களுக்கு புத்தகங்கள் வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது. தலைமையாசிரியர்கள் வட்டார கல்வி அலுவலகத்திலிருந்து புத்தகங்களை எடுத்து செல்ல துவங்கியுள்ளனர்.வட்டார கல்வி அலுவலர்கள் கூறுகையில், பள்ளி திறக்கும் நாளில் அனைத்து மாணவர்களுக்கும் நோட்டு, புத்தகம் மற்றும் சீருடைகள் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. பள்ளிகளுக்கு வாகனங்கள் மூலம் கொண்டு செல்லும் பணிகள் நடக்கிறது என்றனர்.