உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / மழைநீரை சேமிக்க வேண்டும் ஒன்றிய தலைவர் கோரிக்கை

மழைநீரை சேமிக்க வேண்டும் ஒன்றிய தலைவர் கோரிக்கை

கமுதி: கமுதி ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதிகளில் ஊருணி, கண்மாய்களில் மழைநீரை சேமிக்க வேண்டும் என்று ஊராட்சி ஒன்றியத் தலைவர் தமிழ்ச்செல்வி கூறினார். கமுதி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் கவுன்சில் கூட்டம் தலைவர் தமிழ்ச்செல்வி தலைமையில் நடந்தது. பி.டி.ஓ., சந்திரமோகன் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் ஒன்றிய கவுன்சிலர்கள் அடிப்படை வசதிகளை நிறைவேற்றக் கோரி கோரிக்கை மனு அளித்தனர். ஒன்றிய தலைவர் தமிழ்ச்செல்வி கூறியதாவது:பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் குருபூஜை விழாவில் பங்கேற்று மரியாதை செலுத்திய முதல்வர் உள்ளிட்ட அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். தற்போது வடகிழக்கு பருவமழை பெய்து வருவதால் கமுதி ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதிகளில் ஊருணி, கண்மாயில் மழைநீரை சேமிக்க ஊராட்சி தலைவர்கள், ஊரக வளர்ச்சி துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஊருணி, கண்மாயில் தண்ணீர் நிரம்பி உடையாமல் இருக்க தேவையான அளவு மணல் மூடைகளை தயார் நிலையில் வைக்க வேண்டும். மழைக்காலத்தில் நோய்கள் பரவாமல் இருக்க பொதுமக்கள் சுகாதாரத்தை பேண வேண்டும். சுகாதாரத்துறை சார்பில் கிராமங்களில் கொசு மருந்து அடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ