உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / தேய்பிறை அஷ்டமி பூஜை

தேய்பிறை அஷ்டமி பூஜை

உத்தரகோசமங்கை : தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு (நவ.,24) உத்தரகோசமங்கை மங்களநாதர் சன்னதி முன்புள்ள சேத்திர கால பைரவருக்கு அபிஷேக அலங்கார தீபாராதனைகள் நடந்தது. வெற்றிலை மற்றும் செவ்வரளி மாலைகள் சூட்டப்பட்டன. ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் சாமி தரிசனம் செய்தனர்.* சாயல்குடி அருகே மாரியூரில் உள்ள பூவேந்தியநாதர் கோயிலில் காலபைரவருக்கு தேய்பிறை அஷ்டமி பூஜை நடந்தது. மூலவர் காலபைரவருக்கு பால், பன்னீர், இளநீர் உள்ளிட்ட அபிஷேக அலங்காரத்தில் தீபாராதனை நடந்தது.*திருப்புல்லாணி அருகே புல்லாணி அம்மன் கோயிலில் காலபைரவருக்கு தனி சன்னதி உள்ளது. தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு கால பைரவருக்கு அபிஷேக அலங்காரத்தில் பூஜைகள் நடந்தது. தேவாரம், திருவாசகப் பாடல்களை ஓதுவார் அரியமுத்து பாடினார். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி