உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / ஆர்.எஸ்.மங்கலம் பஸ் ஸ்டாண்டில் குடிப்பதற்கு தண்ணீர் இன்றி அவதி

ஆர்.எஸ்.மங்கலம் பஸ் ஸ்டாண்டில் குடிப்பதற்கு தண்ணீர் இன்றி அவதி

பயணிகள் பாதிப்புஆர்.எஸ்.மங்கலம்: ஆர்.எஸ்.மங்கலம் பஸ் ஸ்டாண்டில் பயணிகளுக்கு குடிநீர் வசதி இல்லாததால் கடுமையான சிரமத்தை சந்திக்கின்றனர்.ஆர்.எஸ். மங்கலம் பஸ் ஸ்டாண்டிற்கு தினமும் ஏராளமான பயணிகள் வந்து செல்கின்றனர். பஸ் ஸ்டாண்டில் சில ஆண்டுகளுக்கு முன்பு குடிநீர் தொட்டி அமைக்கப்பட்டு குடிநீர் நிரப்பப்பட்டதால் பயணிகள் பயனடைந்தனர்.அதைத் தொடர்ந்து தொட்டியை பராமரிப்பதற்கோ, அதில் பயணிகள் பயன்பாட்டிற்கு குடிநீர் நிரப்புவதற்கோ சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் கவனம் செலுத்தாததால் பஸ் ஸ்டாண்டில் குடிநீர் தொட்டி கடந்த சில மாதங்களாக தலைகீழாக காட்சி பொருளாக உள்ளது.கோடை காலம் துவங்கி வெயில் சுட்டெரித்து வரும் நிலையிலும் பஸ் ஸ்டாண்டில் குடிநீர் சேவையை நிறைவேற்ற அதிகாரிகள் முன் வராததால் பயணிகள் குடிநீருக்கு சிரமத்தை சந்திக்கின்றனர். வசதி படைத்தோர் பாட்டில் தண்ணீரை விலை கொடுத்து வாங்கி பயன்படுத்தும் நிலையில் ஏழை பயணிகள் குடிநீருக்கு சிரமப்படுகின்றனர்.

நீர் மோர் பந்தல் திறப்பு

பஸ் ஸ்டாண்டில் தவித்த வாய்க்கு தண்ணீர் இல்லை. குடிநீர் தொட்டி பல மாதங்களாக காட்சி பொருளாக உள்ளது. இந்நிலையில் நேற்று பஸ் ஸ்டாண்ட் வளாகத்தில் பந்தல் அமைத்து நீர் மோர் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது. இதை கண்ட பயணிகள் பல மாதமாக பஸ் ஸ்டாண்டில் தண்ணீர் இல்லை. இதை சரி செய்வதற்கு முன் வராத அதிகாரிகளும், மக்கள் பிரதிநிதிகளும் அரசு பணத்தில் கொட்டகை அமைத்து நீர் மோர் வழங்கும் விழா என சிலரை நிறுத்தி போட்டோ எடுப்பது தேவைதானா என விமர்சனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை