உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் /  திருக்குறள் வேள்வி ஒப்புவித்தல் போட்டி

 திருக்குறள் வேள்வி ஒப்புவித்தல் போட்டி

ராமநாதபுரம்: ராமநாதபுரம் பாரதிநகரில் உள்ள கலைவாணி மெட்ரிகுலேஷன் பள்ளியில் 15ம் ஆண்டு திருக் குறள் வேள்வி எனப்படும் திருக்குறள் போட்டிகள் நடக்க உள்ளது. ஜன., 11ல் கலைவாணி மெட்ரிகுலேஷன் பள்ளியில் காலை 9:00 முதல் 10:00 மணி வரை பதிவு நேரம் ஆரம்பமாகி போட்டிகள் காலை 10:00 முதல் மதியம் 12:00 மணி வரை நடக்கிறது. அதிகாரம் (21) தீவினை அச்சம் முதல் அதிகாரம்(35) துறவு வரை தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம். மொத்தம் 15 அதிகாரங்கள் முழுவதும் பயன்படுத்தலாம். 3, 4, 5ம் வகுப்பு மாணவர்களுக்கு திருக் குறள் ஒப்புவித்தல் 5 நிமிடத்தில் எவ்வளவு முடியுமோ அவ்வளவு தவறின்றி தெளிவாக ஒப்புவித்தல் வேண்டும். 6, 7, 8 மாணவர்களுக்கு திருக்குறள் எழுதுதல் ஒரு மணி நேரத்தில் எவ்வளவு முடியுமோ அவ்வளவு தவறின்றி அதிக எண்ணிக்கையில் சிறப்பாக எழுத வேண்டும். 9,10ம் வகுப்பு மாணவர்களுக்கு திருக்குறள் பேச்சுப்போட்டி, 'செல்வத்துள் செல்வம்',பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்களுக்கு திருக்குறள் கட்டுரை போட்டி 'ஏரின் உழாஅர் உழவர்' மற்றும் கல்லுாரி மாணவர்களுக்கு கவிதைப்போட்டி - 'அற்றார் அழிபசி' என்ற தலைப்பில் நடக்க உள்ளது என பள்ளி தாளாளர் ஜெகதீஸ்வரன், தமிழ் சங்க தலைவர் அப்துல் சலாம், செயலாளர் டாக்டர் சந்திரசேகர் ஆகியோர் தெரிவித்தனர். ஜன., 10க்குள் பங்கேற்க விருப்பமுள்ளவர்கள் தெரிவிக்கலாம் எனவும், ஒவ்வொரு வகுப்புக்கும் ஐந்து மாணவர்கள் பதிவு செய்யலாம். எழுதும் போட்டிக்கான தாள்கள் வழங்கப்படும். பங்குபெறும் அனைவருக்கும் சான்றிதழ் பரிசு உண்டு. வெற்றி பெறும் மாணவர்களுக்கு பரிசு, நினைவு கேடயம் உள்ளிட்டவைகள் வழங்கப்படும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ