மேலும் செய்திகள்
நுாலகத்துறை சார்பில் திருவள்ளுவர் தின விழா
24-Dec-2024
ராமநாதபுரம்: திருவள்ளுவர் வெள்ளி விழாவையொட்டி ராமநாதபுரம் மாவட்ட மைய நுாலகத்தில் கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் திருவள்ளுவரின் உருப்படத்திற்கு மலர்துாவி மரியாதை செலுத்தினார்.திருவள்ளுவரின் புகைப்படக்கண்காட்சி, திருக்குறள் புத்தகக்கண்காட்சியை துவக்கி வைத்தார். மாவட்டத்தில் டிச.,23 (நேற்று) முதல் ஒரு வாரத்திற்கு மாணவர்கள், வாசகர்களுக்கான பேச்சுப் போட்டி, கட்டுரைப் போட்டி மற்றும் ஓவியப்போட்டிகள் நடக்கிறது.மாவட்ட மைய நுாலகர் (பொ) அற்புத ஞான ருக்மணி, மாவட்ட நுாலக கண்காணிப்பாளர் கார்த்திகேயன், வாசகர்கள், நுாலகர்கள் பங்கேற்றனர்.
24-Dec-2024