வாசகர்கள் கருத்துகள் ( 1 )
நமது சவுகரியத்தை சோசியல் ஒர்க்காக அங்கே நடை பயிற்சி செய்பவர்கள் ஒரு தொண்டாக செய்யலாமே, ஒரு சஜஷன் தான்.
ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கரை நடைமேடை ஓரத்தில் சீமைக்கருவேல மரங்கள் வளர்ந்துள்ளதால் மக்கள் வேதனை அடைந்தனர். ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள், சுற்றுலா பயணிகள் வருகின்றனர். இவர்கள் கோயிலில் சுவாமி தரிசனம் செய்த பின் பொழுது போக்க வசதியாக மத்திய சுற்றுலா நிதி ரூ.1.50 கோடியில் 2020ல் அக்னி தீர்த்த கடற்கரை அருகே 500 மீ.,ல் நகராட்சி நிர்வாகம் நடைமேடை அமைக்கப்பட்டது. இந்த நடைமேடையில் பக்தர்கள், சுற்றுலாப் பயணிகள் மற்றும் உள்ளூர் மக்கள் வாக்கிங் சென்றபடி கடல் அழகை கண்டு ரசித்தனர். இந்த நடை மேடையை மறுசீரமைத்த நாள் முதல் தற்போது வரை பராமரிப்பு செய்யவில்லை. இதனால் கைப்பிடி சுவர் துாண்கள் சேதமடைந்தும், துருப்பிடிக்காத இரும்பு கம்பிகளை திருடர்கள் அபேஸ் செய்தனர். மேலும் நடைமேடை ஓரத்தில் சீமைக்கருவேல மரங்கள் அடர்ந்து வளர்ந்துள்ளதால் நடைமேடையில் நடக்க முடியாத நிலை உள்ளது. இதனால் வாக்கிங் செல்லும் மக்கள் வேதனை அடைந்தனர்.
நமது சவுகரியத்தை சோசியல் ஒர்க்காக அங்கே நடை பயிற்சி செய்பவர்கள் ஒரு தொண்டாக செய்யலாமே, ஒரு சஜஷன் தான்.