உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / ரேஷனில் பொருள் வாங்காதவர்  பொருளில்லா  கார்டுக்கு மாறலாம்

ரேஷனில் பொருள் வாங்காதவர்  பொருளில்லா  கார்டுக்கு மாறலாம்

ராமநாதபுரம்,: ரேஷன் கடைகளில் பொருட்கள் வாங்க விருப்பம் இல்லாதவர்கள் பொருளில்லா கார்டாக வகை மாற்றம் செய்யலாம்.பொது விநியோகத் திட்டத்தில் ரேஷன் கடைகளில் அத்தியாவசியப் பொருட்கள் வழங்கப்படுகிறது. அவற்றை பெற விருப்பமில்லாமல் இருக்கும் ரேஷன் கார்டுதாரர்கள் அவர்களது உரிமத்தை விட்டுக்கொடுக்கலாம்.விருப்பமுள்ளவர்கள் உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர் வோர் பாதுகாப்புத் துறை வலைதளத்தின் www.tnpds.gov.inமூலமாக பொருளில்லா ரேஷன் கார்டு ஆக வகை மாற்றம் செய்து கொள்ளலாம் என மாவட்ட வருவாய் அலுவலர் கோவிந்தராஜலு தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ