உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் தீ விபத்து சிகிச்சை பெற முடியாமல் மூவர் பலி

ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் தீ விபத்து சிகிச்சை பெற முடியாமல் மூவர் பலி

ராமநாதபுரம்: ராமநாதபுரம் மருத்துவக்கல்லுாரிமருத்துவமனையில் மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டது. புகை பரவியதால் நோயாளிகள்வெளியே செல்ல முடியாமல் பாதிக்கப்பட்டனர். அந்த நேரத்தில் வாகன விபத்தில் சிக்கிய 3 பேர் சிகிச்சை பெற முடியாமல் உயிரிழந்தனர். ராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை புதிய கட்டடத்தில்மின் கசிவு ஏற்பட்டதால் 2வது மாடியில் தீ விபத்து ஏற்பட்டது.உடனடியாக மின்சாரம் துண்டிக்கப்பட்டு நோயாளிகள் அனைவரையும் பாதுகாப்பாக முதல் தளத்துக்குஅழைத்து வந்தனர். வளாகம் இருளில் மூழ்கியதாலும் புகை காரணமாகவும் நோயாளிகள் சிரமப்பட்டனர். உயிரிழப்புஏதும் இல்லை. டார்ச் வெளிச்சத்தில் நோயாளிகளை மீட்கும்பணி நடந்தது.

விபத்தில் சிக்கி மூவர் பலி

ராமநாதபுரம் அருகே வாலாந்தரவை விலக்கில் நேற்றிரவு விபத்து ஏற்பட்டது. அதில் சிக்கியவர்களை ஆம்புலன்சில் மருத்துவமனைக்கு அழைத்து வந்தனர். ஆனால் இங்கு தீ விபத்து காரணமாக சிகிச்சையளிக்க முடியாத சூழல் ஏற்பட்டது. இதனால் 3 பேர் பலியாகினர். இறந்தவர்கள் குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி