உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / கமுதி அருகே சொட்டு நீர் பாசனத்தில் தக்காளி சாகுபடி

கமுதி அருகே சொட்டு நீர் பாசனத்தில் தக்காளி சாகுபடி

கமுதி: கமுதி அருகே கோரைப்பள்ளம் கிராமத்தில் சொட்டு நீர் பாசனத்தில் விவசாயிகள் தக்காளி விவசாயம் செய்கின்றனர்.கமுதி அருகே கோரைப்பள்ளம் கிராமத்தில் நெல், மிளகாய், வாழை உட்பட சிறுதானிய பயிர்களும் விவசாயம் செய்கின்றனர். இப்பகுதியில் ஏராளமான விவசாயிகள் இயற்கை விவசாயத்தை நம்பி வாழ்கின்றனர். கோரைப்பள்ளம் விவசாயி ராமர் கடந்த பல ஆண்டுகளாக இயற்கை முறையில் மிளகாய், பருத்தி, தக்காளி, சிறுதானிய பயிர்கள் விவசாயம் செய்கிறார். தற்போது சொட்டு நீர் பாசனத்தில் தக்காளி விவசாயம் செய்கிறார். விவசாயி ராமர் கூறியதாவது:கோரைப்பள்ளம் கிராமத்தில் கடந்த பல ஆண்டுகளாக இயற்கை உரம் பயன்படுத்தி விவசாயம் செய்து வருகிறேன். தற்போது வேளாண் துறை மூலம் 100 சதவீதம் மானியத்தில் சொட்டு நீர் பாசனம் அமைத்து தக்காளி விவசாயம் செய்கிறேன். இதன் மூலம் தேவை இல்லாமல் தண்ணீர் வீணாவதை தடுக்க முடிகிறது. கடந்த மூன்றாண்டுகளுக்கு முன் தக்காளி விவசாயத்தில் நஷ்டம் ஏற்பட்டது. தற்போது சொட்டு நீர் பாசனம் உதவியாக உள்ளது. தக்காளி செடியில் காய்ப்பு துவங்கியுள்ளது. சொட்டுநீர் பாசனத்தால் செலவும் குறைந்துள்ளது என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை