உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / தனுஷ்கோடியில் ஒதுங்கும் ஆபத்தான ஜெல்லி மீன்கள் சுற்றுலா பயணிகளே உஷார்

தனுஷ்கோடியில் ஒதுங்கும் ஆபத்தான ஜெல்லி மீன்கள் சுற்றுலா பயணிகளே உஷார்

ராமேஸ்வரம்:தனுஷ்கோடி கடற்கரையில் ஜெல்லி மீன்கள் ஒதுங்குவதால் சுற்றுலாப் பயணிகள் உஷாராக இருக்க வேண்டும் என சுற்றுலா ஆர்வலர்கள் தெரிவித்தனர்.டிச., முதல் பிப்., வரை நிலவும் குளிர்கால சீசனையொட்டி தனுஷ்கோடி தென் கடலோரத்தில் வரும் சூடை மீன், அவுளி மீன், முரல் மீன் உள்ளிட்ட சிறிய ரக மீன்களை உட்கொள்ள ஜெல்லி மீன்கள் வருவது வழக்கம். இந்த மீன்கள் கடலோரத்தில் மீன்களை உட்கொள்ளும் போது திடீரென எழும் ராட்சத அலையால் கரை ஒதுங்குவதோடு மீனவர்களின் கரை வலையில் சிக்குகின்றன. இவற்றோடு விஷத்தன்மை மிக்க ஆபத்தான ஜெல்லி மீன்களும் கரை ஒதுங்குகின்றன. இதனால் கடல் அலையை கண்டு ரசித்து விளையாடும் சுற்றுலாப் பயணிகளுக்கு ஜெல்லி மீன்களால் ஆபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே சுற்றுலாப் பயணிகள் தனுஷ்கோடி கடற்கரையில் இறங்கி விளையாடவோ குளிக்கவோ வேண்டாம் என சுற்றுலா ஆர்வலர்கள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ