உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / வழிகாட்டி பலகையின்றி சுற்றுலா பயணிகள் குழப்பம்

வழிகாட்டி பலகையின்றி சுற்றுலா பயணிகள் குழப்பம்

உத்தரகோசமங்கை: உத்தரகோசமங்கையில் இருந்து கிழக்கு நோக்கி செல்லும் திருப்புல்லாணி சாலையில் பெயர் பலகை இல்லாததால் சுற்றுலா பயணிகள் குழப்பம் அடைகின்றனர்.உத்தரகோசமங்கையில் உள்ள மங்களநாதர் சுவாமி, மங்களேஸ்வரி அம்மன் கோயிலுக்கு ஏராளமான பக்தர்கள் வருகின்றனர். தற்போது கும்பாபிேஷகம் முடிந்து மண்டல பூஜைகள் நடப்பதால் வெளியூர் பக்தர்கள் வருகை அதிகரித்துள்ளது. குறிப்பாக ராமேஸ்வரம், திருப்புல்லாணி சென்று விட்டும், உத்தரகோசமங்கை கோயிலுக்கு வந்து செல்லும் சுற்றுலா பயணிகள் கிழக்கு நோக்கி செல்லும் திருப்புல்லாணி சாலையில் வழிகாட்டி பலகை இல்லாதால் குழப்பம் அடைக்கின்றனர்.சிலர் வழிதவறி கீழக்கரை ரோட்டில் செல்ல வாய்ப்பு உள்ளது. எனவே வழிகாட்டி பலகை வைக்க சம்பந்தப்பட்ட ஊராட்சி, அல்லது நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ