உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / ஜூலை 9ல்  தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்த ஆலோசனை

ஜூலை 9ல்  தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்த ஆலோசனை

ராமநாதபுரம்: ராமநாதபுரத்தில் அனைத்து தொழிற்சங்கங்களின் சார்பில் வேலை நிறுத்த ஆலோசனை கூட்டம் நடந்தது. மத்திய அரசின் மக்கள் விரோத, தொழிலாளர், விவசாயிகள் விரோத கொள்கைகளை எதிர்த்து ஜூலை 9ல் வேலை நிறுத்தப் போராட்டம் நடக்கவுள்ளது. இதற்கான ஆலோசனைக்கூட்டம் சி.ஐ.டி.யு., ஏ.ஐ.டி.யு.சி, தொ.மு.ச ஆகிய சங்க நிர்வாகிகள் பங்கேற்றனர். சி.ஐ.டி.யு., மாவட்டத்தலைவர் சந்தானம் தலைமை வகித்தார். நோக்கங்கள் குறித்து தொ.மு.ச., மாவட்ட செயலாளர் மலைக்கண்ணு பேசினார். வேலை நிறுத்த தயாரிப்பு பணிகள், மாவட்டத்தில் நடை பெற்ற பணிகளை விளக்கி ஏ.ஐ.டி.யு.சி., மாவட்ட செயலாளர் ராஜன் பேசினார். நிறைவாக சி.ஐ.டி.யு., மாவட்ட செயலாளர் சிவாஜி வேலை நிறுத்தம் வெற்றி பெறுவதற்கான பணிகள் குறித்து பேசினார். நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.பரமக்குடி, ராமநாதபுரத்தில் தெருமுனை பிரசாரம் நடத்தவும், ராமநாதபுரம், பரமக்குடி, ராமேஸ்வரம், திருவாடானை, கமுதி, முதுகுளத்துார் ஆகிய இடங்களில் கூட்டாக மறியல் போராட்டம் நடத்தவும், சிக்கலில் சி.ஐ.டி.யு., தனியாக மறியல் செய்வது என்றும் முடிவு செய்யப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ