உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / வாரச்சந்தையில் போதுமான மின்விளக்கு வசதியின்றி வியாபாரிகள், மக்கள் அவதி

வாரச்சந்தையில் போதுமான மின்விளக்கு வசதியின்றி வியாபாரிகள், மக்கள் அவதி

முதுகுளத்துார் : முதுகுளத்துார் வாரச்சந்தை இடத்தில் போதுமான அளவு மின்விளக்கு, குடிநீர் உட்பட அடிப்படை வசதி இல்லாததால் வியாபாரிகள்,மக்கள் சிரமப்படுகின்றனர். முதுகுளத்துார் பஸ் ஸ்டாண்ட் அருகே வாரச்சந்தை செயல்பட்டு வருகிறது. இங்கு கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு புதிதாக கட்டடம் கட்டப்பட்டு செயல்படுகிறது. இங்கு முதுகுளத்துார், சாயல்குடி, கமுதி, அபிராமம், வீரசோழன் பகுதியை சேர்ந்த 200க்கும் மேற்பட்டோர் கடை அமைத்து வியாபாரம் செய்கின்றனர். முதுகுளத்துார் அதனை சுற்றியுள்ள 100க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து ஏராளமான மக்கள் அத்தியாவசிய பொருட்கள் வாங்கி செல்கின்றனர். வாரச்சந்தையில் நடுவில் அமைக்கப்பட்டுள்ள கூடாரத்திற்கு மட்டும் மின்விளக்கு வசதி உள்ளது. அதனை சுற்றியுள்ள பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள கடைகளுக்கு போதுமான அளவு மின்விளக்கு வசதி இல்லாததால் மாலை நேரத்திற்கு மேல் இருளில் தவிக்கும் சூழ்நிலை உள்ளது. இதனால் வேறுவழியின்றி கையில் மின்விளக்கை பிடித்து ஆபத்தான முறையில் வியாபாரம் செய்கின்றனர். இதனால் மாலை நேரத்தில் வியாபாரம் பாதிக்கப்படுகிறது. ஏதாவது அசம்பாவிதம் ஏற்பட வாய்ப்புள்ளது. அதுமட்டுமில்லாமல் குடிநீர் வசதி உட்பட புதிதாக கட்டப்பட்ட கழிப்பறைக்கு தண்ணீர் வசதி இல்லாததால் காட்சிப்பொருளாக உள்ள நிலையில் வியாபாரிகள், மக்கள் சிரமப்படுகின்றனர். எனவே வாரச்சந்தை கட்டடத்திற்கு மின்விளக்கு உட்பட அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க பேரூராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும் என வியாபாரிகள், மக்கள் வலியுறுத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை