உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / பண்டிகை காலங்களில் வணிகர்களின் பாதுகாப்பிற்கு ரோந்து பணி அவசியம் வணிகர் சங்கத்தினர் வலியுறுத்தல்

பண்டிகை காலங்களில் வணிகர்களின் பாதுகாப்பிற்கு ரோந்து பணி அவசியம் வணிகர் சங்கத்தினர் வலியுறுத்தல்

சாயல்குடி: -தீபாவளி மற்றும் பண்டிகை தினங்களில் மாவட்ட நிர்வாகம் அனைத்து தாலுகா நகர் பகுதிகளில் இரவு 12:00 மணி வரை பொதுமக்கள் அச்சமின்றி பொருட்கள் வாங்க இரவு நேர ரோந்து பணி செய்ய வேண்டும் என வணிகர் சங்கத்தினர் கோரிக்கை வைத்தனர்.தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநில துணைத்தலைவர் எம்.பெத்தராஜ் கூறியதாவது:அக்.,30 பசும்பொன் முத்துராமலிங்க தேவர் குருபூஜை மற்றும் மறுநாள் தீபாவளி பண்டிகை வர உள்ள நிலையில் மாவட்டம் முழுவதும் உள்ள அனைத்து நகர்பகுதிகளிலும் இரவு 12:00 மணி வரை ஜவுளிக்கடை, பட்டாசு கடை, சூப்பர் மார்க்கெட், ஸ்வீட் கடை உள்ளிட்ட பொருட்களுக்கு வியாபாரம் செய்யும் வணிகர்கள் அச்சமின்றி வியாபாரம் செய்ய வேண்டும். சம்பந்தப்பட்ட போலீஸ் சரகங்களில் இரவு ரோந்து பணிகளை செய்ய வேண்டும். இந்நிலையில் ஒரு சில இடங்களில் பணம் கொடுக்காமல் தின்பண்டங்களை பெறுவதற்காகவும், கடைகளை சூறையாடியும் விரும்பத்தகாத சம்பவங்கள் மாவட்டத்தில் பல இடங்களில் நடந்துள்ளது. இதனால் வணிகம் செய்யும் வியாபாரிகளை அச்சுறுத்தி இடர்பாடுகளை சந்திக்கும் வாய்ப்பு உள்ளது. தீபாவளி நேரம் நெருங்குவதால் அரசு அனுமதி பெற்று பட்டாசு வணிகம் செய்யும் வணிகர்களின் வாழ்வாதாரம் பாதிக்கும் வகையில் கிராமங்களில் இருந்து டூ வீலர் மற்றும் சிறு வாகனங்களில் பட்டாசுகளை சிவகாசியில் இருந்து பாதுகாப்பற்ற முறையில் கொள்முதல் செய்து விற்பனை செய்கின்றனர்.சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள், தீயணைப்பு துறையினர், வருவாய்த்துறையினர், போலீசார் ஒவ்வொரு தாலுகாவிலும் இதுபோன்ற பட்டாசு விற்பனையை தவிர்க்க முன் வரவேண்டும்.அரசு உரிய வழிகாட்டுதலை வழங்க வேண்டும் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ