கடை வாடகைக்கு 18 சதவீதம் ஜி.எஸ்.டி., வரியை கண்டித்து வணிகர்கள் போராட்டம்
ராமநாதபுரம்: ராமநாதபுரத்தில் வர்த்தகர் சங்கம் சார்பில் கடை வாடகையின் மீது 18 சதவீதம் ஜி.எஸ்.டி., வரி விதிப்பை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.ராமநாதபுரம் அரண்மனை முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு வர்த்தகர் சங்க மாவட்டத்தலைவர் ஜெகதீசன் தலைமை வகித்தார். மாவட்ட பொதுச் செயலாளர் குப்தா கோவிந்தராஜன் ஆர்ப்பாட்டத்தை துவக்கி வைத்தார். மாவட்டச் செயலாளர் ஜீவானந்தம், பொருளாளர் சாதிக் அலி, மாநில துணைத்தலைவர்கள் மணிவண்ணன், பெத்துராஜ், மாநில இணை செயலாளர்கள் சந்திரன், ராமபாண்டியன்.ராமநாதபுரம் மாவட்ட இரு சக்கர மோட்டார் வாகன பழுது நீக்குவோர் சங்க மாநில பொதுச் செயலாளர் குமாரவேலு, மாவட்டத்தலைவர் வரதராஜன், பொருளாளர் சபரி தாஸ், மாநில செயற்குழு உறுப்பினர் சுந்தரபாண்டியன் உட்பட பல்வேறு அமைப்புகளை சேர்ந்த நிர்வாகிகள் பங்கேற்றனர். இதில் ராமநாதபுரம், பரமக்குடி, சத்திரக்குடி, முதுகுளத்துார், கடலாடி, சாயல்குடி, தேவிபட்டினம், பார்த்திபனுார், ஆர்.எஸ்.மங்கலம், தொண்டி, பேரையூர், அபிராமம், கீழக்கரை ஆகிய பகுதிகளை சேர்ந்த வர்த்தகர் சங்க நிர்வாகிகள் பங்கேற்றனர்.இதில் கடை வாடகையின் மீது 18 சதவீதம் ஜி.எஸ்.டி., வரி விதிப்பை ரத்து செய்ய வேண்டும். உள்ளாட்சி சொத்துவரி உயர்வை ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினர்.