வியாபாரிகள் கோரிக்கை
ராமநாதபுரம்: சாயல்குடியில் கடைகளை அகற்றும் அரசின் முடிவை கைவிட வலியுறுத்தி அப்பகுதி வியாபாரிகள் ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளிக்க வந்தனர்.சாயல்குடி பெருவணிகர் சங்கம் சார்பில் ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த குறைதீர்க்கும் முகாமில் கோரிக்கை மனு அளித்துள்ளனர். இதில் சாயல்குடி நகரில் பஸ் ஸ்டாண்ட் எதிரில் அருப்புகோட்டை மெயின் ரோடு அருகே30 ஆண்டுகளாக கடை நடத்தி வரு கிறோம். இந்நிலையில் ஆக்கிரமிப்பு சட்டப்படி அறிவிப்பு அனுப்பாமல் 20 கடைகளை இடிக்க போவதாக சாயல்குடி போலீசார், பேரூராட்சி செயல் அலுவலர் தெரிவித்துள்ளனர். அக்கடைகளை நம்பி வாழும் எங்களது வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு மின் இணைப்பு துண்டிப்பு, கட்டுமானங்களை இடிக்கும் நடவடிக்கைளை அதிகாரிகள் கைவிட வேண்டும். அனுபவ பாத்தியமான கடைகளுக்கு கலெக்டர் பட்டா வழங்க உத்தரவிட வேண்டும் என வலியுறுத்தினர்.