உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / கமுதக்குடி அரசு பள்ளியில் பாரம்பரிய உணவு திருவிழா

கமுதக்குடி அரசு பள்ளியில் பாரம்பரிய உணவு திருவிழா

பரமக்குடி : பரமக்குடி அருகே கமுதக்குடி அரசு உயர்நிலைப் பள்ளியில் பாரம்பரிய சிறுதானிய உணவுத் திருவிழாவில் 110 வகையான உணவை செய்து மாணவர்கள் அசத்தினர். பள்ளி மாணவர்களிடையே சிறுதானியத்தின் பயன்பாடுகள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் விழா நடத்தப்பட்டது. பள்ளி மேலாண்மை குழு தலைவி விஜிமாலா துவக்கி வைத்தார். இதில் மாணவர்கள் சாமை, குதிரைவாலி, கம்பு, தினை, சோளம், வரகு, கருப்பு கவுனி, சீரக சம்பா அரிசி உள்ளிட்ட பல பாரம்பரிய சிறுதானியங்களை பயன்படுத்தி சமைத்தனர். அப்போது ஒவ்வொருவரும் தங்கள் உணவுகளை மற்றவர்களுக்கு கொடுத்து பரிமாறி மகிழ்ந்தனர். ஒவ்வொரு ஆண்டும் செப்., மாதம் ஊட்டச்சத்து மாதமாக கொண்டாடப்படுவதால் இப்பள்ளியில் பாரம்பரிய உணவு திருவிழா நடத்தப்பட்டு வருவதாக தலைமை ஆசிரியர் சக்தி தெரிவித்தார். விழாவில் பள்ளி ஆசிரியர்கள், பெற்றோர்கள், மாணவர்கள் மற்றும் இந்து தொடக்கப்பள்ளி மாணவர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ