உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / கிராம வளர்ச்சி சீரமைப்பு, புத்துயிர் அளித்தல் குறித்த பயிற்சி முகாம்

கிராம வளர்ச்சி சீரமைப்பு, புத்துயிர் அளித்தல் குறித்த பயிற்சி முகாம்

ஆர்.எஸ்.மங்கலம்: ஆர்.எஸ். மங்கலத்தில் தமிழ்நாடு கிராம வளர்ச்சி சீரமைப்பு மற்றும் புத்துயிர் அளித்தல் குறித்த பயிற்சி முகாம் நடந்தது. முகாமிற்கு பி.டி.ஓ., (கி.ஊ.) சுதாகர் தலைமை வகித்தார். ஆணையாளர் காமேஸ்வரி முன்னிலை வகித்தார். சாலைகள் மற்றும் பாலங்கள் மண்டல அலுவலர் உதவி செயற்பொறியாளர் மோசஸ் பயிற்சியை துவங்கி வைத்தார். இதில், அனைத்து குக்கிராமங்களிலும், கிராம பங்கேற்பு மதிப்பீடு முறையை, மக்களின் அடிப்படை இலக்குகளை கண்டறிவதற்கான விரிவான மதிப்பீட்டை நடத்துவதற்கான அறிவுரைகள் வழங்கப்பட்டன. ஊராட்சி வாரியாக மக்களை சந்தித்து அக்.7 முதல் அக்.17 வரை மக்களின் அடிப்படைத் தேவைகள் குறித்து, கிராம மட்டத்தில் மதிப்பீடு செய்யப்படுகிறது. இதன்மூலம், மக்களின் அடிப்படைத் தேவைகள் முன்னுரிமை அடிப்படையில் நிறைவேற்றுவதற்கு அரசு வழிமுறை ஏற்படுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது. பயிற்சியில், துணை பி.டி.ஓ., (ஊ) ரவி, மண்டல துணை பி.டி.ஓ.,க்கள் சவுந்தர வள்ளி, ஆர்த்தி, முனீஸ்பிரபு, கோமதிநாயகம், ஊராட்சி செயலாளர்கள், சுய உதவிக் குழு உறுப்பினர்கள், சத்துணவு அமைப்பாளர்கள் பங்கேற்றனர். சார் வணக்கம், தொழில்மலர் விளம்பர விருப்பம் சார்.. படத்துடன் செய்தி வெளியிட்டு உதவவும் சார்..


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை