விவசாயிகளுக்கு பயிற்சி வகுப்பு
கமுதி: கமுதி கோட்டைமேடு அருகே சேதுசீமை இயற்கை பெட் உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்தில் விவசாயிகளுக்கு பயிற்சி வகுப்பு நடந்தது.நிறுவன தலைவர் முத்துராமலிங்கம் தலைமை வகித்தார். ஆர்கானிக் நிறுவன இயக்குனர் செந்தில், ராமநாதபுரம் உழவர் உற்பத்தியாளர் நிறுவன முதன்மை செயல் அலுவலர் வடிவேல் முன்னிலை வகித்தனர். இயற்கை முறையில் பருத்தி சாகுபடி, மண்வளம் காக்கவும், உற்பத்தி செய்த பருத்திக்கு கூடுதல் விலை கிடைக்கவும் பயிற்சி அளித்து விதைகள் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை முதன்மை செயல் அலுவலர் நித்தியா செய்தார்.