மேலும் செய்திகள்
வாக்காளர் பட்டியல் பயிற்சி முகாம்
21-Jun-2025
திருவாடானை: தமிழகம் உள்ளிட்ட சில மாநிலங்களில் 2026ல் சட்டசபை தேர்தல் நடக்க உள்ளது. இதற்கான ஆயத்த பணிகளை தேர்தல் ஆணையம் துவங்கி உள்ளது. தேர்தல் களப்பணியில் ஓட்டுச்சாவடி அலுவலர்கள் முக்கிய பங்காற்றுகின்றனர்.ஒவ்வொரு தொகுதிக்கும் ஓட்டுச்சாவடி அலுவலர்களுக்கு ஒரு கண்காணிப்பாளர் வீதம் 234 பேர் தேர்வு செய்யப்பட்டு முதல் முறையாக டில்லியில் சில நாட்களுக்கு முன்பு பயிற்சி அளிக்கப்பட்டது. திருவாடானை சட்டசபை தொகுதி சார்பில் ஓட்டுச்சாவடி அலுவலர்களின் கண்காணிப்பாளர் மெய்யப்பன் டில்லி சென்று அங்கு நடந்த பயிற்சியில் கலந்து கொண்டார்.இந்நிலையில் திருவாடானை சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட திருவாடானை, ஆர்.எஸ்.மங்கலம் தாலுகா ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்களுக்கான பயிற்சி நேற்று திருவாடானையில் நடந்தது. திருவாடானை தாசில்தார் ஆண்டி, ஆர்.எஸ்.மங்கலம் தாசில்தார் அமர்நாத், தேர்தல் துணை தாசில்தார்கள் சிராஜூதின், பாலகுமார் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்களுக்கு மெய்யப்பன் பயிற்சி அளித்தார். பிழை இல்லாத வாக்காளர் பட்டியல் திருத்தப்பணிகள், வாக்காளர் சேர்ப்பு, நீக்கம், திருத்தம் படிவங்களை பயன்படுத்தும் முறை, 1200 வாக்காளர்களுக்கும் அதிகமான ஓட்டுச்சாவடிகளை பிரிப்பது குறித்தும், மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்களை எவ்வாறு கையாளுவது, ஓட்டுப்பதிவு முடிந்தவுடன் இயந்திரங்களை மூடி சீல் வைப்பது உள்ளிட்ட பல்வேறு பயிற்சி அளிக்கப்பட்டது. 218 பேர் கலந்து கொண்டனர்.
21-Jun-2025