உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / செய்யது அம்மாள் பொறியியல்  கல்லுாரியில் பயிற்சி பட்டறை

செய்யது அம்மாள் பொறியியல்  கல்லுாரியில் பயிற்சி பட்டறை

ராமநாதபுரம் -ராமநாதபுரம் செய்யது அம்மாள் பொறியியல் கல்லுாரியில் மின்னணுவியல் மற்றும் தொடர்பியல் துறை சார்பில் பிசிபி வடிவமைப்பு மற்றும் உருவாக்கம் குறித்த பயிற்சி பட்டறை நடந்தது.முதல்வர் பெரியசாமி தலைமை வகித்தார். துறைத்தலைவர் பேராசிரியர் மகேந்திரன் வரவேற்றார். சிறப்பு விருந்தினராக சென்னையிலுள்ள நிக்கிட்ரானிக்ஸின் தொழில் நுட்ப மேலாளர் செந்தில்குமார் பிசிபி வடிவமைப்பு மற்றும் உருவாக்கம் குறித்த பயிற்சியை மாணவர்களுக்கு அளித்தார். பயிற்சி பட்டறையில் செய்யது அம்மாள் பொறியியல் கல்லுாரி, மதுரை தியாகராஜர் பொறியியல் கல்லுாரியின் மின்னணுவியல் துறை நான்காம் ஆண்டு மாணவர்கள் பங்கேற்றனர். ஏற்பாடுகளை ஒருங்கிணைப்பாளர் எஸ்.பிரவீன் சாமுவேல் மற்றும் துறை பேராசிரியர்கள் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி