உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / மருத்துவமனையில் தீ நோயாளிகள் மாற்றம்

மருத்துவமனையில் தீ நோயாளிகள் மாற்றம்

ராமநாதபுரம்:ராமநாதபுரம் மருத்துவமனையில் மின்கசிவால் தீ விபத்து ஏற்பட்டதால் தீயணைப்பு வீரர்கள் நோயாளிகளை மீட்டு தீயை அணைத்தனர்.ராமநாதபுரம் - மதுரை ரோட்டில் எலும்பு முறிவு மருத்துவமனை செயல்படுகிறது. இங்கு நேற்று மாலை 6:45 மணிக்கு மின்கசிவால் தீப்பற்றியது. இதையடுத்து நிர்வாகத்தினர் தீயணைப்புத்துறை, ஆம்புலன்சுகளுக்கும் தகவல் தந்தனர்.உள்நோயாளிகள் பாதுகாப்பாக மீட்கப்பட்டு வேறு தனியார் மருத்துவமனைகளுக்கு மாற்றப்பட்டனர். தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர். விபத்தில் கீழ்தளத்தில் உள்ள பொருட்கள் சேதமடைந்தன.-----


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை