உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / ராமேஸ்வரத்தில் மரங்கள் வளர்ப்பு விழிப்புணர்வு

ராமேஸ்வரத்தில் மரங்கள் வளர்ப்பு விழிப்புணர்வு

ராமேஸ்வரம்: ராமேஸ்வரத்தில் பசுமை ராமேஸ்வரம் சார்பில் மருத்துவ குணமிக்க மரங்கள் வளர்ப்பது குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தினர்.பசுமை ராமேஸ்வரம் அமைப்பு சார்பில் ராமேஸ்வரம் விவேகானந்தா வித்யாலயா பள்ளி வளாகத்தில் மாணவிகளுக்கு மருத்துவ குணமிக்க மரங்கள் வளர்ப்பது குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தினர்.மேலும் மாணவர்களுக்கு ஓவியம், கட்டுரை மற்றும் வினாடி வினா போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.புனித தீர்த்தங்களை பாதுகாக்கும் விதமாக 'தாயின் பெயரில் ஒரு மரம் நடுதல்' எனும் நிகழ்ச்சி நடத்தப்பட்டு அர்ஜுனா மற்றும் பீமா தீர்த்தம் குளத்தை சுற்றி மருத்துவ குணமிக்க மரக்கன்றுகள் நட்டனர்.இதில் கேரளா தேசிய மூலிகை தாவர வாரிய துணை இயக்குநர் சந்திரசேகர், அறிவியல் ஆலோசகர் பத்மகுமார், ராமேஸ்வரம் தாசில்தார் அப்துல் ஜபார், ராமேஸ்வரம் விவேகானந்தா கேந்திரம் நிர்வாகி சரஸ்வதியம்மாள், மீனவர் சங்கத் தலைவர் போஸ், அப்துல்கலாம் பேரன் சலீம் உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை