உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / மரக்கன்று நடும் விழா

மரக்கன்று நடும் விழா

ராமநாதபுரம் : சுதந்திர போராட்ட வீரர் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் பிறந்த நாளை முன்னிட்டு ராமநாதபுரம் சேதுபதி நகர் 4-வது பிரதான முகப்பு சாலையில் மரக்கன்று நடும் விழா நடந்தது.பாரதிநகர் இந்தியன் வங்கி கிளை மேலாளர் கவியரசன் தலைமை வகித்தார். ஆல மரம், அரசு, அத்தி,மகிழம்,வேங்கை, வேம்பு,புங்கை, கொடுக்காப்புளி, திரிபுலா ஆகிய மரக்கன்று நடப்பட்டது. இனிப்பு வழங்கப்பட்டது. கோஸ்டல் பீனிக்ஸ் விளையாட்டு கழக மாணவர்கள், பயிற்சியாளர் பிரசாத், நிக்கோலஸ் சிலம்பம் பயிற்சி பள்ளி மாணவர்கள், பசுமை குடைகள் இயக்க மாணவர்கள் பங்கேற்றனர். பொருளாதார குற்றப்பிரிவு எஸ்.எஸ்.ஐ., சுபாஷ் சீனிவாசன் ஏற்பாடுகளை செய்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !