மரக்கன்றுகள் நடும் விழா
ராமேஸ்வரம்:பாம்பனில் உள்ள அன்னை ஸ்கொலாஸ்டிகா பெண்கள் கல்லுாரி பசுமை இயக்கம் மற்றும் இயற்கை பாதுகாப்பு அமைப்பு இணைந்து நேற்று கல்லுாரி வளாகத்தில் புங்கன், வேம்பு உள்ளிட்ட நிழல் தரும் ஏராளமான மரக்கன்றுகள் நடும் விழா நடந்தது.முதல்வர் ஆனிபெர்பெட் சோபி, செயலாளர் ரூபி, துணை முதல்வர் ஹெப்சி விமல்டாராணி, நிர்வாகி மோட்ச ராகினி மற்றும் கல்லுாரி பேராசிரியர்கள், மாணவிகள் பலர் மரக்கன்றுகளை நட்டு வைத்தனர். இதன்பின் மண் வளம், இயற்கை வளம் பாதுகாப்போம் என்பதை வலியுறுத்தி மாணவிகள் உறுதிமொழி ஏற்றனர்.