பனையடியேந்தலில் மரக்கன்று நடும் விழா
உத்தரகோசமங்கை: பச்சை மீட்பு திட்டத்தில் உத்தரகோசமங்கை அருகே பனையடியேந்தல் கிராமத்தில் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடந்தது. சி.எம்.எஸ்., மதுரை மண்டல மேலாளர் ராம்குமார் தலைமை வகித்தார். ராமநாதபுரம் கிரிஷ் வியாகன் கேந்திரா துணை பேராசிரியர் முத்துராமன் முன்னிலை வகித்தார். திருப்புல்லாணி ஒன்றியக் குழு தலைவர் எஸ்.புல்லாணி, ஊராட்சி தலைவர் லதா வெள்ளி, சிறப்பு எஸ்.ஐ., சுபாஷ் சீனிவாசன், அணி தலைவர் ஆசை தம்பி உள்ளிட்டோர் பங்கேற்றனர். ஆயிரம் மரக்கன்றுகள் கோவிந்தன் கோயில் வளாகத்தில் நடப்பட்டது. நிகழ்ச்சி திட்ட ஒருங்கிணைப்பாளர்கள் சுந்தர்ராஜன், ராஜாராம் ஏற்பாடுகளை செய்திருந்தனர்.