அனுமதியின்றி வெட்டிய மரங்கள், லாரி பறிமுதல்
திருவாடானை: திருவாடானை அருகே மச்சூர் கிராமத்தில் அரசு அனுமதியின்றி வெட்டியமரங்கள் மற்றும் ஏற்றிய லாரியை வருவாய்துறையினர் பறிமுதல் செய்தனர்.புல்லுார் பிர்கா மச்சூர் கிராமத்தில் பட்டா இடங்களில் அரசு அனுமதி இல்லாமல் பனைமரங்கள் மற்றும் புளியமரங்கள் வெட்டபடுவதாக தகவல் கிடைத்தது. மச்சூர் குரூப் வி.ஏ.ஓ. பாண்டியம்மாள் சென்று, மரங்களை வெட்டி அடுக்கி வைக்கபட்டிருந்த லாரியை பறிமுதல் செய்து, திருவாடானை தாலுகா அலுவலகத்தில் ஒப்படைத்தார். இச் சம்பவம் குறித்து ஆர்.டி.ஓ.விற்கு பரிந்துரை செய்யபட்டுள்ளது. வருவாய்த்துறையினர் விசாரிக்கின்றனர்.