பரமக்குடியில் குப்பைக்கு தீ வைப்பதால் அழியும் மரங்கள்
விழிப்புணர்வு தேவைபரமக்குடி: பரமக்குடி வைகை ஆற்றங்கரையோரம் உட்பட பல இடங்களில் கொட்டப்படும் குப்பைக்கு தீ வைப்பதால் மரங்கள் அழிகின்றன. பரமக்குடி நகராட்சியில் 36 வார்டுகள் இருக்கிறது. இங்கு தினந்தோறும் அள்ளப்படும் குப்பை நகராட்சி குப்பை கிடங்குகளுக்கு கொண்டு செல்லப்படுகிறது. மேலும் பொது மக்கள் வீடுகளில் மக்கும் மற்றும் மக்காத குப்பையை பிரித்து கொடுத்து வருகின்றனர். இச்சூழலில் குப்பையை வைகை ஆற்றின் கரையோரங்கள் உட்பட பல்வேறு பகுதிகளில் ஆங்காங்கே குவித்து வைக்கப்படுகிறது. இவற்றை நகராட்சி ஊழியர்கள், மக்கள் மற்றும் சமூக விரோதிகள் தீ வைக்கும் போக்கு அதிகரித்துள்ளது. அப்போது அருகில் உள்ள மரங்கள் அனைத்தும் எரிகின்றன. இதனால் கரையோரங்கள் உட்பட பல்வேறு பகுதிகளில் மரங்களை வளர்க்கும் திட்டம் வீணாகி வருவதாக சமூக அலுவலர்கள் குற்றம் சாட்டு கின்றனர். எனவே குப்பையை முறைப்படுத்துவதுடன் அவற்றை தீ வைப்பதை நிறுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.