உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / 15 கிலோ கடல் அட்டை பதுக்கிய இருவர் கைது

15 கிலோ கடல் அட்டை பதுக்கிய இருவர் கைது

ராமநாதபுரம்:ராமநாதபுரம் மாவட்டம் தேவிபட்டினம் கடற்கரை பகுதியில் பதுக்கி வைத்திருந்த 15 கிலோ கடல் அட்டையை பறிமுதல் செய்த வனத்துறையினர் இருவரை கைது செய்தனர். மன்னார் வளைகுடா கடலில் அரியவகை கடல்வாழ் உயிரினங்களை பிடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக மருத்துவ குணம் உள்ளதாக நம்பி சிலர்கடல் அட்டைகளை பிடித்து கடத்துகின்றனர். அவற்றை வேக வைத்து பதப்படுத்தினால் கிலோ ரூ.10 ஆயிரம் வரை உலக சந்தையில் விலை போகிறது. இந்நிலையில் ராமநாதபுரம் வனஉயிரின பாதுகாப்பு கடல்சார் உயரடுக்கு படை பிரிவு ரேஞ்சர் செல்வம் குழுவினர் தேவிபட்டினம் கடற்கரையில் நேற்று அதிகாலை ரோந்து சென்றனர். மரைன் போலீஸ் ஸ்டேனில் இருந்து சற்று தொலையில் வலையில் மீன்கள் போன்று கடல் அட்டைகளை பிடித்து வைத்திருந்த அப்பகுதியை சேர்ந்த மீனவர்கள் பாஸ்கர் 60, நுார் சுலைமான் 45, ஆகியோர் சிக்கினர். அவர்களிடம் இருந்து பச்சை கடல் அட்டை 15 கிலோவை பறிமுதல் செய்து ராமநாதபுரம் வனச்சரக அலுவலகத்தில் ஒப்படைத்தனர். வனக்காப்பாளர் முருகன் உத்தரவில் இருவரும் கைது செய்யப்பட்டனர். கடல் அட்டையை வனஅலுவலக வளாகத்திற்குள் குழிதோண்டி புதைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ