மேலும் செய்திகள்
இன்றும் நாளையும் குடிநீர் நிறுத்தம்
09-Sep-2025
ராமநாதபுரம்:ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடி அருகே வீட்டிற்கு கூரை அமைக்கும் போது மின்சாரம் தாக்கி இருவர் பலியாகினர். ஏர்வாடி அடுத்த பனையடியேந்தல் பகுதியை சேர்ந்தவர் முருகையா 75. இவரது வீட்டில் அதே பகுதியை சேர்ந்த மங்களராமு 61, இரும்பு தகட்டில் கூரை அமைக்கும் பணியில் ஈடுபட்டார். அவருடன் முருகையாவும் இணைந்து நேற்று காலை வேலை செய்தார். அப்போது எதிர்பாராத விதமாக வீட்டின் கூரை மீது சென்ற மின் கம்பியில் இரும்பு தகடு உரசியது. இதில் இருவர் மீதும் மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்தில் உயிரிழந்தனர்.ஏர்வாடி தர்கா போலீசார் விசாரிக்கின்றனர்.
09-Sep-2025