இரு விபத்தில் இருவர் பலி
திருவாடானை: சிவகங்கை மாவட்டம் முப்பையூர் அருகே வென்னியூர் கிராமத்தை சேர்ந்தவர் செல்வகுமார் 35. அக்.,20ல் டூவீலரில் திருச்சி-ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் சென்றார். கருமொழி செக்போஸ்ட் அருகே கார் மோதியதில் காயமடைந்த செல்வகுமார் சிவகங்கை அரசு மருத்துவகல்லுாரி மருத்துவமனையில் அனுமதிக்கபட்டு நேற்று முன்தினம் இறந்தார். திருவாடானை போலீசார் விசாரிக்கின்றனர். * தொண்டி அருகே காரங்காடு கிராமத்தை சேர்ந்தவர் ஆன்ட்ரோஸ் ஐசக் 61. இவர் அக்., 21ல் மணக்குடி செல்வதற்காக அந்தப்பக்கமாக சென்றவரின் டூவீலரில் லிப்ட் கேட்டு சென்றார். முனியய்யா கோயில் விலக்கில் டூவீலர் வளைந்த போது தவறி விழுந்து காயமடைந்தார். ராமநாதபுரம் அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில் அனுமதிக்கபட்டவர் நேற்று காலை இறந்தார். தொண்டி போலீசார் விசாரிக்கின்றனர்.