உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / ரூ.2500 லஞ்சம் வாங்கிய எஸ்.எஸ்.ஐ., இரு போலீசார் கைது

ரூ.2500 லஞ்சம் வாங்கிய எஸ்.எஸ்.ஐ., இரு போலீசார் கைது

ராமேஸ்வரம் : ராமேஸ்வரம் அருகே தனுஷ்கோடி போலீஸ் ஸ்டேஷனில் வழக்குப்பதியாமல் இருக்க ரூ.2500 லஞ்சம் வாங்கிய எஸ்.எஸ்.ஐ., மற்றும் இரு போலீசார் கைது செய்யப்பட்டனர்.ராமேஸ்வரம் புதுரோடு பகுதியை சேர்ந்த மீனவர் ரவி 48. நேற்று முன்தினம் இரு மதுபாட்டில்கள் வைத்திருந்ததாக தனுஷ்கோடி எஸ்.எஸ்.ஐ., கனக சபாபதி 55, போலீசார் முத்துகருப்பையா 33, மாரி 32, ஆகியோர் இவரை பிடித்தனர்.ரவி மீது வழக்கு பதியாமல் இருக்க லஞ்சமாக ரூ.2500 கொடுக்குமாறு வலியுறுத்தினர். இதுகுறித்து ரவி ,ராமநாதபுரம் லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் செய்தார்.இதையடுத்து ரசாயன பவுடர் தடவிய 2500 ரூபாய் நோட்டுகளை அவர்கள் ரவியிடம் கொடுத்து அனுப்பினர். நேற்று மதியம் தனுஷ்கோடி போலீஸ் ஸ்டேஷனில் இருந்த எஸ்.எஸ்.ஐ., கனக சபாபதி, போலீஸ்காரர்கள் முத்துகருப்பையா, மாரி ஆகியோரிடம் அப்பணத்தை ரவி கொடுத்தார். அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் ஸ்டேஷனுள் நுழைந்து அப்பணத்தை வாங்கிய மூவரையும் கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர். மேல்விசாரணை நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ