உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / கமுதி அருகே வாளை காட்டி டூவீலர் பறிப்பு

கமுதி அருகே வாளை காட்டி டூவீலர் பறிப்பு

கமுதி : -கமுதி அருகே திருவரை அருகே அடையாளம் தெரியாத நபர்கள் 'ஹெல்மெட்' அணிந்து வந்து வாளைகாட்டி மிரட்டி ராஜசெல்வம் என்பவர் டூ வீலரை பறித்து சென்றனர். கமுதி அருகே எம்.புதுக்குளம் சேர்ந்த ராஜசெல்வம் 34, சாயல்குடியில் இருந்து எம்.புதுக்குளம் கிராமத்திற்கு டூவீலரில் வந்து கொண்டிருந்தார். அப்போது திருவரை அருகே அடையாளம் தெரியாத இருவர் 'ஹெல்மெட்' அணிந்து வந்து பசும்பொன் செல்வதற்கு வழி கேட்டுள்ளனர். பின்பு கையில் வைத்திருந்த வாளை காட்டி மிரட்டி தாக்கி விட்டு ராஜசெல்வம் டூவீலரை பறித்துச் சென்றுள்ளனர். இதுகுறித்து கோவிலாங்குளம் எஸ்.ஐ., சண்முகவேல் விசாரிக்கிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை