உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / 100 நாள் வேலை வழங்காததால் ஒன்றிய அலுவலகம் முற்றுகை

100 நாள் வேலை வழங்காததால் ஒன்றிய அலுவலகம் முற்றுகை

கமுதி: கமுதி அருகே போத்தநதி கிராமத்தில் 100 நாள் வேலை வழங்காததை கண்டித்து கமுதி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை கிராம மக்கள் முற்றுகையிட்டனர்.கமுதி அருகே காக்குடி ஊராட்சிக்கு உட்பட்ட போத்தநதி கிராமத்தில் 150 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றனர். இங்கு விவசாயம் பிரதான தொழிலாக உள்ளது. இப்பகுதி கிராம மக்களுக்கு 100 நாள் வேலை வழங்கப்பட்டு வந்தது.இந்நிலையில் கடந்த ஓராண்டாக முறையாக 100 நாள் வேலை வழங்கப்படவில்லை. இதுகுறித்து பலமுறை அதிகாரிகளிடம் கூறியும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. போத்தநதியை சேர்ந்த 50க்கும் மேற்பட்ட பெண்கள் 100 நாள் வேலை வழங்காததை கண்டித்து கமுதி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டனர். ஒரு வாரத்திற்க்குள் வேலை வழங்குவதாக அதிகாரிகள் கூறியதை அடுத்து கிராம மக்கள் கலைந்து சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ