உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / அடிப்படை வசதிகள் கோரி ஒன்றிய அலுவலகம் முற்றுகை

அடிப்படை வசதிகள் கோரி ஒன்றிய அலுவலகம் முற்றுகை

ராமநாதபுரம்: வேளானுார் கிராமத்தில் அடிப்படை வசதிகள் செய்துதரக்கோரி, திருப்புல்லாணி ஒன்றிய அலுவலகத்தினை முற்றுகையிட்டு தமிழ்புலிகள் அமைப்பினர் போராட்டம் நடத்தினர்.மாவட்ட செயலாளர் ரஞ்சித் தலைமை வகித்தார். இதில், திருப்புல்லாணி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட வேளானுார் கிராமத்தில் அருந்ததியர் மக்கள் பயன்படுத்தும் மயானத்திற்கு சிமென்ட் ரோடு சுற்றுச்சுவர், தகன மேடை, குடிநீர் வசதி செய்து தர வேண்டும் என வலியுறுத்தினர்.அதிகாரிகள் பேச்சுவார்த்தை பிறகு கலைந்துசென்றனர். போராட்டத்தில் மாநில செயற்குழு உறுப்பினர் சிவக்குமார், மாநில இளம் புலிகள் அணி துணை செயலாளர் திருவளவன், தென்மண்டல துணைச்செயலாளர் சுல்தான் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி