உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / மேலமுந்தலில் ஆபத்தான நிலையில் குடிநீர் மேல்நிலை நீர் தேக்க தொட்டி கண்டுகொள்ளாத யூனியன் அலுவலர்கள்

மேலமுந்தலில் ஆபத்தான நிலையில் குடிநீர் மேல்நிலை நீர் தேக்க தொட்டி கண்டுகொள்ளாத யூனியன் அலுவலர்கள்

சாயல்குடி:' சாயல்குடி அருகே மாரியூர் ஊராட்சி மேலமுந்தலில் சேதமடைந்த நிலையில் குடிநீர் மேல்நிலை நீர் தேக்க தொட்டியால் விபத்து அபாயம் நிலவுகிறது. மேலமுந்தல் மன்னார் வளைகுடா கடற்கரை செல்லும் வழியில் 1995ல் கட்டப்பட்ட 15 ஆயிரம் லி., குடிநீர் மேல்நிலை நீர் தேக்கத் தொட்டி உள்ளது. கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக சேதமடைந்த நிலையில் பயன்பாடின்றி காட்சிப் பொருளாக உள்ளது. பக்கவாட்டு துாண்கள் தாங்கும் திறன் இன்றி உள்ளது. இவற்றில் சிமென்ட் பூச்சுக்கள் உதிர்ந்து இரும்பு கம்பிகள் வெளியே தெரிகிறது. இதனருகே அங்கன்வாடி மையம் மற்றும் பொதுமக்கள் குடியிருக்கும் பகுதி உள்ளது. அப்பகுதி மக்கள் கூறியதாவது: பயன்பாடில்லாத மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியால் எவ்வித பயனும் இல்லை. எனவே இத்தொட்டியை இடித்து அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். தொட்டியின் அருகே யாரும் செல்லாதவாறு தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். எனவே கடலாடி யூனியன் நிர்வாகம் மற்றும் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் இவ்விடத்தை ஆய்வு செய்து இடித்து அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை