கீழபெத்தனேந்தல் கண்மாயில் இயற்கை வளம் அழிப்பு நா.த.க., கண்டனம்
பரமக்குடி: பரமக்குடி அருகே கஞ்சியேந்தல் ஊராட்சி கீழ பெத்தனேந்தல் கிராம கண்மாயில் இயற்கை வளம் அளிக்கப்படுவதை கண்டித்து நாம் தமிழர் கட்சியினர் மனு அளித்தனர். பரமக்குடி அருகே தோளூர் குரூப் கஞ்சி யேந்தல் ஊராட்சி பெத்த னேந்தல் கிராமத்தில் கண்மாய் உள்ளது. இங்கு அரசு நிர்ணயித்த அளவை மீறி 10 அடி முதல் 15 அடி ஆழம் வரை மண் அள்ளப்பட்டு வருகிறது. இயற்கை வளங்களை பாதுகாக்க உறுதிமொழி ஏற்றுள்ள அரசு இதுபோன்ற மணல் கொள்ளைக்கு துணை போகிறது. எனவே அதிகாரிகளின் துணையோடு நடக்கும் இச்செயலை உடனடியாக தடுக்க வேண்டும். தொடர்ந்து நடவடிக்கை எடுக்காத நிலையில் மக்களை திரட்டி நாம் தமிழர் கட்சி சார்பில் போராட் டத்தில் ஈடுபடுவோம், என கட்சியின் மாநில சுற்றுச் சூழல் பாசறை ஒருங் கிணைப்பாளர் ஜஸ்டின் வளனரசு தெரிவித்தார். மேலும் நிர்வாகிகள் தாசில்தார் மற்றும் ஆர்.டி.ஓ., அலுவலகத்தில் புகார் மனு அளித்துள்ள னர். முதலமைச்சரின் தனிப்பிரிவு, மாவட்ட கலெக்டர் உள்ளிட் டோருக்கும் மணல் கொள்ளை குறித்த படம் உள்ளிட்ட ஆதாரத்துடன் அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது என்றனர்.