உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / சக்கர தீர்த்த குளத்தை சீரமைக்க வலியுறுத்தல்

சக்கர தீர்த்த குளத்தை சீரமைக்க வலியுறுத்தல்

தேவிபட்டினம்: தேவிபட்டினத்தில் பிரசித்தி பெற்ற நவபாஷாண நவக்கிரக திருக்கோயில் அமைந்துள்ளது.இக்கோயிலுக்கு வரும் பக்தர்கள், கடலில் நீராடி நவக்கிரகங்களை சுற்றி வந்து வழிபாடு செய்வது வழக்கம். கடல் நீரில் நீராடிய பக்தர்கள் எதிரே உள்ள சக்கர தீர்த்த குளத்தில் குளித்து செல்கின்றனர்.இந்நிலையில் சக்கர தீர்த்த குளத்தில் உள்ள நீர் பல ஆண்டுகளாக தேங்கியுள்ளதாலும், முறையாக சுத்தம் செய்யப்படாததாலும் துர்நாற்றம் ஏற்பட்டுள்ளது. இதனால் தீர்த்த குளத்தில் குளிக்கும் பக்தர்களுக்கு தொற்று நோய்கள் ஏற்படும் நிலை ஏற்பட்டுள்ளது.எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் சக்கர தீர்த்த குளத்து நீரை ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தர்கள் வலியுறுத்தி உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி