மேலும் செய்திகள்
பல மணி நேர மின் தடை
19-Jul-2025
ஆர்.எஸ்.மங்கலம்: ஆர்.எஸ்.மங்கலம் அருகே உப்பூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் உப்பூர், கடலுார், மோர்ப்பண்ணை, ஊரணங்குடி, நாகனேந்தல், புறகரை, அடந்தனார் கோட்டை, மயிலுாரணி உட்பட சுற்றுப்புற பகுதி கிராமங்களைச் சேர்ந்த மாணவர்கள் படிக்கின்றனர். முக்கியத்துவம் வாய்ந்த பள்ளியின் சுற்றுச் சுவர் சேதம் அடைந்துள்ளதால் பள்ளி வளாகத்திற்குள் கால்நடைகள் வருகின்றன. இதனால் வகுப்பறையில் உள்ள மாணவர்களுக்கு கவனச் சிதறல் காரணமாக கல்வி பாதிக்கப்படுவதுடன், மாணவர்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழலும் ஏற்படுகிறது. எனவே, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் மாணவர்களின் நலன் கருதி பள்ளியில் சேதமடைந்த சுற்றுச் சுவரை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாணவர்களின் பெற்றோர் வலியுறுத்தி உள்ளனர்.
19-Jul-2025