ஆனந்துார் பெரிய ஊருணியை துாய்மைப்படுத்த வலியுறுத்தல்
ஆர். எஸ்.மங்கலம் : ஆர்.எஸ்.மங்கலம் ஆனந்துார் பஸ் ஸ்டாண்ட் அருகே அமைந்துள்ள பெரிய ஊருணியால் கால்நடைகள் மற்றும் அப்பகுதி கிராமத்தினர் பயனடைவதால் ஊருணியை துாய்மைப்படுத்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.குடியிருப்பு பகுதிகளின் நிலத்தடி நீர்மட்டத்தின் ஆதாரமாகவும், பெரிய ஊருணி விளங்குகிறது. இந்நிலையில் கடந்த சில ஆண்டுகளாக பெரிய ஊருணி முறையாக பராமரிக்கப்படாததால் புதர் மண்டி ஊருணி நீர் மாசடைகிறது. தற்போது வறட்சி நிலவும் நிலையில் பொதுமக்கள் ஊருணி நீரை அதிகளவில் பயன்படுத்தும் நிலை ஏற்பட்டுள்ளது.எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள், ஊருணி பகுதியில் வளர்ந்துள்ள புதர்களை அகற்றி ஊரணி நீரை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்தினர்.