/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / பொட்டக்கோட்டை குடிநீர் ஊருணியை சுற்றிலும் வேலி அமைக்க வலியுறுத்தல்
பொட்டக்கோட்டை குடிநீர் ஊருணியை சுற்றிலும் வேலி அமைக்க வலியுறுத்தல்
ஆர்.எஸ்.மங்கலம்: ஆர்.எஸ்.மங்கலத்தில் அரியான் கோட்டை வழியாக இளையான்குடி செல்லும் ரோட்டில் பொட்டக் கோட்டை கிராமம் அமைந்துள்ளது. அப்பகுதி மக்கள் ரோட்டோரத்தில் உள்ள ஊருணியில் மழைக் காலத்தில் தண்ணீரை தேக்கி குடிநீராக பயன்படுத்துகின்றனர். இதனால் குடிநீர் தேவை பூர்த்தியடைவதுடன் நிலத்தடி நீர்மட்டமும் பாது காக்கப்பட்டு வருகிறது. முக்கியத்துவம் வாய்ந்த குடிநீர் ஊருணி நீரை பாதுகாக்கும் வகையில் கம்பி வேலி அமைக்கப்படாததால் அவ்வழியாக செல்லும் பாதசாரிகளும், கால்நடைகளும் குடிநீரை மாசுபடுத்தும் நிலை உள்ளது. எனவே ஊருணியில் தேங்கியுள்ள குடிநீரை பாதுகாக்கும் விதமாக சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் ஊருணியை சுற்றிலும் கம்பி முள்வேலி அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.