உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / தாழ்வான மின்கம்பிகளை சரி செய்ய வலியுறுத்தல்

தாழ்வான மின்கம்பிகளை சரி செய்ய வலியுறுத்தல்

ஆர்.எஸ்.மங்கலம்: ஆர்.எஸ்.மங்கலம் அருகே புல்லமடை ஊராட்சி இரட்டையூரணி விநாயகர் கோயில் பகுதியில் மின் கம்பிகள் தாழ்வாக தொங்கிய வண்ணம் சீமைக்கருவேல மரங்களில் சிக்கி உள்ளன. இதனால் அப்பகுதி குடியிருப்பு வாசிகளும், கோயிலுக்கு செல்லும் பக்தர்களும் அச்சமடைந்துள்ளனர். மேலும் லேசான காற்று அடித்தாலே அப்பகுதியில் மின்தடை ஏற்படும் நிலையும் உள்ளது. எனவே மின்வாரிய அதிகாரிகள் தாழ்வாக செல்லும் மின் கம்பிகளை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை