உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / வடமாடு மஞ்சு விரட்டு விழா

வடமாடு மஞ்சு விரட்டு விழா

ஆர்.எஸ்.மங்கலம்: ஆர்.எஸ்.மங்கலம் அருகே பெரியார் நகர் சித்தா குறிச்சி அய்யனார்கோயில் விழாவை முன்னிட்டு வடமாடு மஞ்சுவிரட்டு விழா நடந்தது. மூலவர் அய்யனாருக்கு பக்தர்கள் சிறப்பு அபிஷேக ஆராதனை செய்து வழிபாடு செய்தனர். தொடர்ந்து வடமாடு மஞ்சுவிரட்டு விழாவில் காளைகள் அவிழ்த்து விடப்பட்டு விழா நடைபெற்றது.இளைஞர்கள் காளைகளை அடக்கி தங்களது வீரத்தை வெளிப்படுத்தினர். வெற்றி பெற்ற காளைகளுக்கும், காளையை அடக்கிய வீரர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன. ஏற்பாடுகளை கிராமத்தினர் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி