மேலும் செய்திகள்
பிளக்ஸ் போர்டு வைத்தவர் கைது
09-Sep-2024
ஆர்.எஸ்.மங்கலம் : ஆர்.எஸ்.மங்கலம் அருகே சூரமடை குழந்தை தெரசா சர்ச் விழாவை முன்னிட்டு வடமாடு மஞ்சுவிரட்டு விழா நடந்தது. இரவில் தேர் பவனியில் மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட தேரில் குழந்தை தெரசா வீதி உலா வந்தார். பாதிரியார்கள் கிறிஸ்டோபர், ஜெபமாலை சுரேஷ் ஆகியோர் திருவிழா திருப்பலி நிறைவேற்றினர். தொடர்ந்து நடைபெற்ற வடமாடு மஞ்சுவிரட்டு போட்டியில் காளைகளை வீரர்கள் அடக்கி திறமைகளை வெளிப்படுத்தினர். விழா ஏற்பாடுகளை கிராமத்தினர் செய்திருந்தனர்.
09-Sep-2024