உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / எமனேஸ்வரம் வரதராஜ பெருமாள் கோயிலில் வைகாசி பிரம்மோற்ஸவம்

எமனேஸ்வரம் வரதராஜ பெருமாள் கோயிலில் வைகாசி பிரம்மோற்ஸவம்

பரமக்குடி: பரமக்குடி எமனேஸ்வரம் வரதராஜ பெருமாள் கோயிலில் 223வது வைகாசி பிரம்மோற்ஸவ விழா மே 31ல் கொடியேற்றத்துடன் துவங்குகிறது. எமனேஸ்வரம் சவுராஷ்டிரா சபைக்கு பாத்தியமான பெருந்தேவி தாயார் வரதராஜ பெருமாள் கோயில் உள்ளது. இங்கு வைகாசி பிரம்மோற்ஸவ விழா மே 31 காலை 8:00 மணிக்கு கொடி ஏற்றத்துடன் துவங்குகிறது. அன்று மாலை அன்ன வாகனத்தில் பெருமாள் உலா வருகிறார். மேலும் தினமும் பல்லக்கு, சிம்மம், சேஷ, கருட, அனுமந்த, யானை வாகனத்தில் வீதி உலா வருவார். ஜூன் 6 காலை ஸ்ரீதேவி, பூதேவி வரதராஜ பெருமாள் திருக்கல்யாணம் நடக்கிறது. அன்று இரவு பூப் பல்லக்கில் வீதிவலம் நடக்கிறது. ஜூன் 7 வெண்ணைத்தாழி கண்ணன் அலங்காரம், மறுநாள் அதிகாலை குதிரை வாகனத்தில் திருமங்கை ஆழ்வார் வேடப்பாரியாகம் நடக்கிறது. ஜூன் 8 மாலை தேரோட்டமும், மறுநாள் தீர்த்தவாரி மற்றும் கொடி இறகத்துடன் விழா நிறைவடையும். ஏற்பாடுகளை சவுராஷ்டிர சபை நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !